திருச்சி கலையரங்கம் வளாகத்தில், நாளை(8ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ‘வள்ளலார் 200’ என்ற பெயரில் முப்பெரும் விழா ஒன்றை இந்து சமய அறநிலையத் துறை நடத்துகிறது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படமும், வள்ளலார் படமும் இடம் பெற்றுள்ளது.
ஆனால் வழக்கமாக நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் காணப்படும் வள்ளலார். இந்த அழைப்பிதழில் விபூதி இல்லாமல் காணப்படுகிறார்.
“நீறில்லா நெற்றி பாழ்” என்று சொன்ன இந்து மதத்தை காக்கும் அறநிலையத்துறையே, அவர் நெற்றியில் இருந்த விபூதியை நீக்கலாமா ? என்று ஆன்மீக அன்பர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். மேலும் அறநிலையத்துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.