• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home குற்றம்

கடலூர் பட்டாசு ஆலை விபத்து | உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கவும்: ராமதாஸ்

Deepika by Deepika
June 23, 2022
in குற்றம், தமிழ்நாடு
0
கடலூர் பட்டாசு ஆலை விபத்து | உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கவும்: ராமதாஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடும், காயமடைந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூவர் உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படாதது தான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது விபத்துக்குள்ளாகியுள்ள பட்டாசு ஆலைக்கான உரிமம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதாகவும், அதை புதுப்பிப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டும் கூட பாதுகாப்பு தணிக்கை உள்ளிட்ட நடைமுறைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட குருங்குடி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகும் கூட இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. இனி வரும் காலங்களிலாவது இத்தகைய பட்டாசு ஆலை விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் செய்ய வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். காயமடைந்த இருவருக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags: 25 lakh each to the families of the victimsCuddalore Fireworks Factory AccidentDr RamadasPMK Dr Ramadas

Related Posts

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன்

June 28, 2022
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

June 28, 2022
முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு
தமிழ்நாடு

முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

June 28, 2022
Next Post
சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

என்ன நடந்தது அதிமுக பொதுக்குழுவில் – முழு விவரம் இதோ

என்ன நடந்தது அதிமுக பொதுக்குழுவில் - முழு விவரம் இதோ

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. மு.க.ஸ்டாலின் நிதியுதவி..!

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. மு.க.ஸ்டாலின் நிதியுதவி..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

Popular News

  • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கம் விலை சற்று குறைவு.. இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் மரணம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  •  இப்படி கூட ரோடு போட முடியுமா..? பாத்தீங்கன்னா ஆடி போயிடுவீங்க அசந்து போய்டுவீங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • ‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் June 28, 2022
  • “மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன் June 28, 2022
  • 2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? – என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை June 28, 2022

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்