தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த பழம்பெரும் நடிகையான ஜமுனா வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமுனா. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1952 ஆம் ஆண்டு தெலுங்கில் புட்டிலு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தங்க மலை ரகசியம், நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மனிதன் மாறவில்லை, மருதநாட்டு வீரன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து 1980 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த இவர், 1989 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.