சென்னை அண்ணா சாலையில் ஒரு சில இடங்களில் நில அதிர்வு போன்று சில விநாடிகள் அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதற்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னை, அண்ணா சாலையில் இன்று பகல் 12 மணி அளவில் ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில் நில அதிர்வு போன்ற தாக்கத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணம் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.